IPLFINAL2023: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கேப்டன் தோனி..! குஜராத் பேட்டிங்..!
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு.
ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
நேற்று மைதானத்தில் மழையானது விட்டுவிட்டுப் பெய்யத் தொடங்கியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு, கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆக முடிவு செய்யப்பட்டிருந்தது. இறுதியில் மழை விடாமல் பெய்த காரணத்தால் போட்டியானது இன்று (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி தற்பொழுது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.