புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி..! மல்யுத்த வீரர்கள் கைது..!

wrestlersprotest

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதற்கிடையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை கவனத்தில் கொண்டு திறப்பு விழா நடக்கும் அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக் கோரி, வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.

போலீசார் வைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி, மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின், மல்யுத்த வீரர் சக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள் பலரை போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்