அரசுக்கு தெரியாமல் கூட்டம் நடத்துகிறார் ஆளுநர் – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

minister ponmudi

நேருக்கு நேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா? என அண்ணாமலைக்கு அமைச்சர் பொன்முடி சவால்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசுக்கு தெரியாமல் துணைவேந்தர்கள் கூட்டம் நடத்துகிறார் ஆளுநர். அரசுக்கு தெரியாமல் ஜூன் 5-ல் உதகையில் துணைவேந்தர் கூட்டத்தை அறிவித்துள்ளார் ஆளுநர். கூட்டம் நடத்துவது பற்றி இணைவேந்தராக இருக்கும் எனக்கு ஆளுநர் தகவல் அளிக்கவில்லை என குற்றசாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும்,  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இதற்கு திமுகவில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், அரசுக்கு தெரியாமல் துணைவேந்தர்கள் கூட்டம் நடத்துகிறார் ஆளுநர் என அமைச்சர் குற்றசாட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, மும்மொழிக் கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? என்பதை குறித்து நேரிடையாக விவாதிக்க தான் தயாராக இருப்பதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார். ஏற்கனவே, மும்மொழி கொள்கை குறித்து விவாதிக்க தயாரா என அண்ணாமலை சவால் விடுத்திருந்த நிலையில், அவர் ஒழுங்காக பேப்பர் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.. நேரடி விவாதத்திற்கு தயார் என அண்ணாமலை தயாரா? என அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்