ஜார்கண்டில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு!

Jharkhand Lightning

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி 2 நாட்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தன்பாத் மாவட்டத்தில் உள்ள பர்வாடா பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் மற்றும் அவரது மகளும், ஜம்தேஸ்பூரில் உள்ள பஹ்ரகோரா மற்றும் கும்லா மாவட்டத்தில் உள்ள சிரோடிஹ் ஆகிய இடங்களில் 2 பேரும் இறந்துள்ள நிலையில், மற்றொரு மரணம் லோஹர்டக்காவிலிருந்து பதிவாகியுள்ளது என கூறப்படுகிறது.

இதுபோன்று, நேற்று முன்தினம் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். சத்ரா, ஹசாரிபாக், ராஞ்சி, பொகாரோ மற்றும் குந்தி மாவட்டங்களில் தலா ஒருவரும், பலமுவில் உள்ள ஹுசைனாபாத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலத்த காற்று மற்றும் மழையால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன.  மாநில பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஜார்கண்ட் அரசு நான்கு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்