தவறி தண்ணீரில் விழுந்த செல்போன்..! அணையில் உள்ள தண்ணீரை பம்பு செட் போட்டு வெளியேற்றிய அரசு அதிகாரி சஸ்பெண்ட்..!

kerkotta

அணையில் தவறி விழுந்த செல்போனை 21 லட்சம் லிட்டர்கள் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி ராஜேஷ் விசுவாஸ் சஸ்பெண்ட் 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கான்கர் மாவட்டத்தில் கெர்கட்டா அணையை பார்வையிடுவதற்காக அரசு அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் சென்றுள்ளார். அப்போது அணைக்கு சென்ற போது அவரது மொபைல் போன் தவறுதலாக அணையில் விழுந்துவிட்டது. இந்த மொபைல் போனின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.

இது 15 அடி ஆழமான தண்ணீரில் விழுந்த நிலையில், உள்ளூர்வாசிகள் அதைக் கண்டுபிடிக்க முயற்சித்தனர். முயற்சி தோல்வியடைந்ததால், அதிகாரி இரண்டு 30 ஹெச்பி டீசல் பம்புகளை மூன்று நாட்கள் தொடர்ந்து இயக்கி, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றினார். அவர் வெளியேற்றிய தண்ணீர் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமானது.

இந்த பம்புகளில் திங்கள்கிழமை மாலை நீர் வெளியேற்றத் தொடங்கி வியாழக்கிழமை வரை தொடர்ந்து இயங்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் நீர்பாசனம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து பணியை நிறுத்தினார். ஆனால், நீர்மட்டம் நிறுத்தப்பட்ட நேரத்தில் ஆறு அடிக்கு கீழே இருந்தது. சுமார் 21 லட்சம் லிட்டர்கள் வெளியேற்றப்பட்டன.

இதுகுறித்து ராஜேஷ் விஸ்வாஸ் கூறுகையில், செல்ஃபி எடுக்கும்போது தனது கையிலிருந்து தொலைபேசி நழுவியது, நீச்சல் தெரிந்தவர்கள், அதைக் கண்டுபிடிக்கமுயற்சித்தனர். இரண்டு அல்லது மூன்று அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம் என்று  கூறினார்.

நீர்வளத் துறை ஒருவரிடம் அனுமதி பெற்று தான் தான் இவ்வாறு செய்த்தாகவும் கூறியுள்ளார். ஆனால் மேற்பரப்பு பாறையாக இருந்ததால் முடியவில்லை, என்று அவர் கூறினார். இவ்வளவு முயற்சிக்கு பின் செல்போன் கிடைத்தும், அந்த செல்போன் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 21 லட்சம் லிட்டர்கள் தண்ணீரை வீணாக்கிய அரசு அதிகாரி ராஜேஷ் விசுவாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்