பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம்.!

NITI Aayog Council

இன்று தொடங்கிய எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி, தலைமை தாங்கினார்.

நாட்டின் எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தலைமையில் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிரமலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் பல முதல்வர்கள், முக்கிய உறுப்பினர்கள் கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.

நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த கவுன்சிலில் அனைத்து முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் இதில் அடங்குவர், மற்றும் இதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். ஆனால், முதல்வர்களான நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சந்திரசேகர் ராவ், அசோக் கெலாட், பினராயி விஜயன் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள்  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன்(Theme): “விக்சித் பாரத் @2047: இந்திய அணியின் பங்கு” கருப்பொருளுடன் இன்றைய நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.

(i)விக்சித் பாரத்@2047, (ii)MSMEகள்(சிறுகுறு தொழில்கள்), (iii)உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், (iv)குறைகளை தீர்த்தல், (v)பெண்களுக்கான அதிகாரம், (vi)சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (vii)திறன் மேம்பாடு, மற்றும் (viii) பகுதி மேம்பாடு மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கான கதி சக்தி உள்ளிட்ட எட்டு முக்கிய  விவகாரங்கள் குறித்து இன்று நாள் முழுவதும் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட  இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்