மும்பைக்கு எதிரான வெற்றி… கில் மட்டும் தான் காரணமா? மோஹித் ஷர்மாவை பாராட்டும் சேவாக்.!
மும்பைக்கு எதிரான வெற்றிக்கு கில் மட்டும் காரணமல்ல, 5 விக்கெட் எடுத்த மோஹித் ஷர்மாவும் காரணம் என சேவாக் ட்வீட்.
நேற்று குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2-வது குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பைனலுக்கு செல்வதற்கு பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் மும்பை அணி பந்துவீச, அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குஜராத் அணியில் கில் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்களில் 233/3 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, குஜராத் அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முக்கியமாக மோஹித் ஷர்மா சிறப்பாக பந்துவீசி(5/10) மும்பை அணியின் வெற்றிக்கனவை தகர்த்தார் என்றே கூறலாம்.
இந்த போட்டிக்கு பிறகு வீரேந்திர சேவாக், 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்திய மோஹித் ஷர்மா வுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், விடாமல் முயற்சித்து நெட் பவுலராக இருந்து மீண்டும் அணிக்குள் வந்த மோஹித் ஷர்மா சிறப்பாக செயல்பட்டார், இந்த சீசனில் 24 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் எடுத்தவர்களிலும் முன்னிலையில் இருக்கிறார்.
Another example of Never Give Up- Mohit Sharma. Was not in the fray last few seasons and a net bowler for GT last season. But in just 13 matches, 24 wickets this season is a champion performance. Top 3 wicket takers all from Gujarat and they so deserve to make it to the finals.… pic.twitter.com/cJ6VxMMSZu
— Virender Sehwag (@virendersehwag) May 26, 2023
மேலும் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான தகுதியான அணி என்றும், நேற்றைய போட்டியில் கில்லுக்கான தினமாக அமைந்தது என்றும் ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் குஜராத் அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக கில் மட்டுமில்லை, மோஹித் ஷர்மாவும் காரணம் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.