அமெரிக்காவில் தீபாவளிக்கு விடுமுறை… மசோதா அறிமுகம்.!
அமெரிக்காவில் தீபாவளியை விடுமுறையாக அறிவிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். ஒவ்வொரு இந்தியரும் தீபாவளி பண்டிகை என்றால் மதங்களை தாண்டி மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது உண்டு. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக, தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா தீபாவளி விடுமுறையை, அமெரிக்காவின் 12வது கூட்டாட்சி(Federal) அங்கீகாரம் பெற்ற விடுமுறையாக மாற்றும்.
சமீபத்தில், பென்சில்வேனியா மாநில செனட்(அமைச்சரவை) தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றியது, பென்சில்வேனியா மாநில செனட் உறுப்பினர் நிகில் சவல் இதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.