திருவண்ணாமலை காவல்துறை அதிரடி.! டிரோன் மூலம் கள்ளச்சாராய கண்காணிப்பு பணி.!

Drone Camera

திருவண்ணாமலை பகுதியில் டிரோன் கேமிரா மூலம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல திருவண்ணாமலை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான குழு, பூசிமலை கும்பம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரை டுடுத்து, மலை பகுதியினை சுற்றி டிரோன் கேமிரா மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்