சென்னையில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்!
சென்னையில் 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
சென்னையில் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தரமணி சரக உதவி ஆணையர் ஜீவானந்தம், சென்னை தெற்கு அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பரங்கிமலை சரக உதவி ஆணையர் அமீர் அகமது, தரமணி சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மோகன், ராயப்பேட்டை சரக உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சைபர் கிரைம் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி கண்ணன், வேப்பேரி உதவி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.