சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா நாளை பதவியேற்பு;!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதிவியேற்கிறார் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்என் ரவி. ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம். அதன்படி, உச்சநீதிமன்ற கொலீஜிய பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சஞ்சய் விஜயகுமாரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா கடந்த 24-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டி.ராஜா ஓய்வு பெற்றதால், சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த சமயத்தில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. அதன்படி, நாளை தலைமையை நீதிபதியாக பதிவு ஏற்கவுள்ளார்.