தி கேரளா ஸ்டோரி பட இயக்குனர் சுதிப்தோ சென் மருத்துவமனையில் அனுமதி.!

இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டி சாதனை படைத்தது.
தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென், படத்துக்கான விளம்பர பயணங்கள் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் குணமடையும் வரை பல்வேறு நகரங்களுக்கு வரவிருக்கும் அனைத்து விளம்பரப் பயணங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த படமானது ஹிந்தி மட்டுமின்றி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது. ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025