இன்று தெலுங்கானா முதல்வரை சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.!

இன்று ஹைதராபாத் வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க உள்ளார்.

டெல்லி அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளதற்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான ராகவ் சதா, சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

டெல்லி லெப்டினன்ட் கவர்னரை நிர்வாகியாக நியமித்து மத்திய அரசு இயற்றிய அவசரச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவருக்கு ஆதரவு அளிக்குமாறு அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற்னர்.

இந்நிலையில், இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாஜக அரசு இயற்றியுள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மற்றும் ஜனநாயக விரோத சட்டத்திற்கு எதிராக ஆதரவு கேட்க  ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வரைச் சந்திக்கிறேன் என்று  ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.