கடலூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்ததை கண்டித்து, கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் மதுபாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்த நிலையில், இன்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட வந்துள்ளனர்.
இதனையறிந்த கடை ஊழியர்கள், கடையின் ஷட்டரை மூடியதால் அவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அருகிலிருந்த வைக்கோல் குடோன் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.