புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு… வைரலாகும் வீடியோ.!

ParliamentBuild Video

புதிதாக திறக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோ இணையத்தில் வைராகிவருகிறது.

வரும் மே 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் வைக்கப்பட இருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பல மத பிரார்த்தனையுடன் தொடங்குகிறது.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழாவை புறக்கணிக்க 20 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோவை, பிரதமர் மோடி தனது ட்விட்டரில், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வைக்கும் புதிய பாராளுமன்ற கட்டிடம் என பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக மோடி, ஒரு சிறப்பு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். அதாவது உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடீயோவை உங்கள் சொந்த குரல் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். #MyParliamentMyPride என்ற ஹாஷ்டேக் பயன்படுத்துமாறும் பிரதமர் மோடி இந்த பதிவில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்