இரவில் தூக்கம் வரவில்லையா…? நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் இதோ..!!
நம்மில் பலருக்கும் இரவில் தூக்கம் வருவதில் சிரமம் உள்ளது என்றே கூறலாம். இரவில் தூக்கம் வரவில்லை என்பதால் போன் உபோயோகித்து கொண்டு நேரத்தை கழித்துவிட்டு காலையில் எழுந்தவுடன் சரியாக தூங்கவில்லையே..தலை வலிக்கிறதே என்று யோசிப்பது உண்டு .
ஆனால், நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகளால் தான் நமது தூக்கம் பாதிக்கிறது. அந்த தவறுகள் என்னவென்றும் தூக்கம் வருவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம் வாருங்கள்..
தூக்கம் வருவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்
1.சரியாக சாப்பிட வேண்டும்
உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் சிலர் சரியாக சாப்பிடாத காரணத்தால் அவர்களுக்கு தூக்கம் வரமால் இருக்கலாம். எனவே, எதைப்பற்றியும் யோசிக்காமல் முதலில் ஒழுங்காக அளவோடு சாப்பிடுங்கள். கனமான உணவுகள் மற்றும் பெரிய உணவுகளை மிகவும் தாமதமாக சாப்பிட வேண்டாம். அவை உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும். இரவு நேரத்தில் பால் சம்மந்த பட்ட உணவுகளை சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
2. புகையிலையை நிறுத்துங்கள் (சிகரெட்)
புகையிலை பிடிப்பதால் அது உங்களை தூங்கவிடாமல் தடுக்கும். உங்களுடைய தூக்கத்தை கெடுக்கிறது. சிலருக்கு புகை பிடிப்பதை எப்படி நிறுத்தவேண்டும் என யோசிப்பது உண்டு. அதற்கு நீங்கள் நல்ல மருத்துவர்களை பார்த்தால் அவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றினாலே போதும். மேலும், இனிமேல் தூக்கம் வரவில்லை என்றால் புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்திவிட்டு 1 வாரம் தூங்க முயற்சி செய்யுங்கள் அதன்பிறகு கண்டிப்பாக நன்றாக தூக்கம் வரும்.
3. செல்போன், டிவி பார்ப்பதை நிறுத்துங்கள்
நீங்கள் தூங்கும் இடங்கள் முதலில் அமைதியாக இருக்கவேண்டும். எனவே, உங்கள் அறையில் செல்போன், டேப்லெட் அல்லது டிஜிட்டல் கடிகாரத்தின் மென்மையான நீல ஒளி உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம். எனவே இதயெல்லாம் நீங்கள் முதலில் அணைக்கவேண்டும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டிவி, கணினிகள் மற்றும் பிற நீல ஒளி மூலங்களை அணைக்கவும். நாங்கள் இப்போது கூறப்போவது சற்று போர்-ஆக இருந்தாலும் கூட இது முற்றிலும் உங்களுக்கு உதவும். சில நாட்கள் இதனை முயற்சி செய்துபாருங்கள்.
4.கவலைகளை தவிர்க்கவேண்டும்
உலகத்தில் உள்ள அனைவருக்குமே எதாவது கவலைகள் மனதில் இருந்துகொண்டே தான் இருக்கும். அதனால், கவலையில் மனதை போட்டு குழப்பி கொள்ளாமல் தூங்கும் நேரம் மட்டும் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். கவலையை மறந்துவிட்டு சந்தோஷமான நிகழ்வுகளை நினைத்து பழகுகங்கள்.
5. உங்கள் கடிகாரத்தைத் பார்க்காதீர்கள்
நம்மில் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் தூங்கும் போது அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பது தான். அப்படி கடிகாரத்தை பார்ப்பதால் வரவிருக்கும் நாளைப் பற்றிய எண்ணங்களால் உங்கள் மனதில் தூண்டும், இது உங்களுடைய தூக்கத்தை கெடுத்து விழித்திருக்கச் செய்யும். எனவே, உங்கள் அலாரம் கடிகாரத்தை உங்கள் படுக்கைக்கு அடியில் டிராயரில் வைக்கவும் அல்லது பார்வையில் இருந்து விலகி வைக்கவும்.
துக்கம் வருவதற்கு சாப்பிடவேண்டிய உணவுகள்
- பாதாம்
- சூடான பால்
- கிவி பழம்
- மீன்
இதையும் படியுங்களேன்- மக்களே தூங்குவதற்கு முன்பு இந்த 5 உணவுகள்..கூடவே கூடாது.!!