பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் – கணக்கெடுக்க அமைச்சர் உத்தரவு!

Mnister V SenthilBalaji

தமிழகத்தில் 100 மீ தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, வழிபாட்டுத்தலம், கல்வி நிறுவன பகுதிகளில் 100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகள் இருக்க கூடாது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஏற்கனவே நகராட்சி, மாநகராட்சிகளில் 50 மீட்டர் என இருந்த தூரத்தை 100 மீட்டராக உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மாநில வாணிப கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். அப்போது, டாஸ்மாக் கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சார் வெளியிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army