இந்திய தொல்லியல் துறை கீழடி அகழ்வாய்வு முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்தது!
இந்திய தொல்லியல் துறை,கீழடி அகழ்வாராய்ச்சியின் முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத், அமெரிக்காவிற்கு உரையாற்ற செல்வதற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
அமெரிக்காவின் வட பகுதி மாகாணங்களில் உள்ள 50 தமிழ்ச்சங்கங்கள் ஒன்றாக இணைந்து, வருகிற 29ஆம் தேதி முதல், ஜூலை ஒன்றாம் தேதி, வருடாந்திர தமிழ் மாநாட்டை நடத்த உள்ளன. இதில் பங்கேற்று உரையாற்றவும், இன்னும் பிற இடங்களில் உரை நிகழ்த்தவும், கீழடி அகழ்வாராய்ச்சி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், இந்திய தொல்லியல் துறையிடம், அமெரிக்கா செல்வதற்கு அமர்நாத் அனுமதி கோரினார். இதனை நீண்ட நாள் கிடப்பில் போட்ட தொல்லியல் துறை, அண்மையில், அமெரிக்கா செல்வதற்கு அனுமதிக்க முடியாது என அமர்நாத்திடம் தெரிவித்துள்ளது. எதன் அடிப்படையில் அனுமதிக்கவில்லை என்பதை இந்திய தொல்லியல் துறை தெளிவுபடுத்த மறுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.