வரும் 28 ஆம் தேதி வரை ‘கோ பர்ஸ்ட்’ விமான சேவைகள் ரத்து… வெளியான அறிவிப்பு.!
செயல்பாட்டு காரணங்களுக்காக ‘கோ பர்ஸ்ட்’ விமானத்தின் அனைத்து சேவைகளும் ரத்து செய்வதாக அறிவிப்பு.
‘கோ பர்ஸ்ட்’ விமான சேவைகள் வரும் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு காரணங்களுக்காக விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் விமான பயணத்திற்கான டிக்கெட் பணம் விரைவில் திரும்ப தரப்படும் என கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான சேவை ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் பயணிகளின் அசவுகரியங்களுக்கு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.