எங்களுடன் போட்டியிடும் தகுதி யாருக்கும் இல்லை ! சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும், தங்களுடன் போட்டியிடும் தகுதி யாருக்கும் இல்லை என கூறியுள்ளார்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் புதிதாக அமைய உள்ள எம்ஜிஆர் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு போட்டியாக வந்தவர்கள் இன்று காணாமல் போயிருக்கின்றனர் என்றும், கமலஹாசன் தானும் ஊரில் இருக்கிறோம் என காட்டிக் கொள்வதற்காக எல்லோரைப் பற்றியும் பேசி வருகிறார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.