காவல்துறையில் சேர அரிய வாய்ப்பு…! மாதம் ரூ.1,16,600 வரை சம்பளம்…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காலியான பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது, 621 அதாவது சப் இன்ஸ்பெக்டர் என்று அழைக்கப்படும் (தாலுக், AR & TSP) பணிக்கான விண்ணப்பம், ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கி ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் TNUSRB என்ற இணயத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) வெளியிட்டுள்ள TNUSRB Notification pdf அறிவிப்பையும் படிக்க வேண்டும். சப் இன்ஸ்பெக்டர் வேலை அறிவிப்பு தொடர்பான அனைத்து தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சப் இன்ஸ்பெக்டர் SI (தாலுகா) வேலைக்கு 366 பணியிடங்கள், சப் இன்ஸ்பெக்டர் (AR ஏஆர்) வேலைக்கு 145 பணியிடங்கள், சப் இன்ஸ்பெக்டர் (TSP டிஎஸ்பி) வேலைக்கு 110 பணியிடங்கள் என மொத்தமாக 621 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தேர்வுக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும். துறைசார்ந்த விண்ணப்பதாரர்கள் திறந்த ஒதுக்கீடு மற்றும் துறைசார் ஒதுக்கீடு ஆகிய இரு தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும். கட்டண விருப்பங்களில் ஆன்லைன் முறைகளான (நெட்-பேங்கிங், UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு) மூலம் பணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் நாள்:
ஆன்லைன் மூலம் காவல் துணை ஆய்வாளர் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கி ஜூன் 30ம் தேதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படுவில்லை.
சப் இன்ஸ்பெக்டருக்கான வயது:
குறைந்தபட்ச வயது தேவை 20 ஆவும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகவும் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
சப் இன்ஸ்பெக்டர் (SI-தாலுக், AR & TSP) ஆகிய மூன்று பிரவுகளுக்கும் மாதம் ரூ.36,900 முதல் தொடங்கி 1,16,600 வரை வழங்கப்படும்.
விண்ணப்பதாரரின் கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் யுஜிசி அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட முறைகளைப் பின்பற்றாமல் திறந்த பல்கலைக்கழகங்கள் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பெற மாட்டார்கள்.
சப் இன்ஸ்பெக்டர் தேர்வு செய்யும் முறை:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) மாநில காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர்கள் (SI) ஆட்சேர்ப்புக்கான தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்நிலைத் தேர்வுகள், விவா-வாய்ஸ் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளைக் கொண்டு தேர்வு செய்யப்படுகிறது. .
எழுத்துத் தேர்வு:
சப் இன்ஸ்பெக்டர் தகுதிக்கு முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு. இது விண்ணப்பதாரரின் அறிவு, திறன் மற்றும் பகுத்தறியும் திறன்களை மதிப்பிடும் முறையாகும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, உளவியல், சட்டம் மற்றும் காவல்துறை நிர்வாகம் போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். அடுத்த கட்டத்திற்குச் செல்ல, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.