10ஆம் வகுப்பு தகுதி போதும்… எல்லை காவல் படையில் தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!
10ஆம் வகுப்பு படித்து இருந்திருந்தால் இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையில் தலைமை காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாம் எந்த படிப்பு படித்திருந்தாலும் அதற்கேற்ற வேலைகள் அதுவும் அரசு வேலைகள் நமது நாட்டிலேயே பல்வேறு இடங்களில் கொட்டி கிடக்கின்றன. அதற்கான தேடல்களும், சரியான முறையில் தொடர் முயற்சியும் இருந்தாலே போதும் நமக்கு நிரந்தர வேலை நிச்சயம்.
தற்போது 10ஆம் வகுப்பு தகுதிக்கு நாடெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ITBPF) தலைமை காவலர்கள்(Head Constable (Midwife)) பணிக்கான அறிவிப்பை ITBPF வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி, எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.
காலிப்பணியிடங்கள் – 81 (இந்தியா முழுக்க பல்வேறு இடங்கள்).
கல்வி தகுதி – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு – 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறைகள் :
- உடல்தகுதி மற்றும் திறன் தேர்வு.
- எழுத்து தேர்வு.
- நடைமுறை தேர்வு.
- உடல்திறன் பரிசோதனை (DME).
- REM ( Reading the Mind in the Eyes Testமுக உணர்வுகளை விழிவழி பார்த்து அறிந்து கொள்ளுதல்)
முக்கிய தேதிகள் :
அறிவிப்பு வெளியான தேதி – 09 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஜூலை 2023.
விண்ணப்பிக்கும் முறை :
- ITBPF தலைமை காவலர் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கு முதலில் recruitment.itbpolice.nic.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
- ITBPF Recruitment 2023 விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) உரிய அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பின்னர், சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- இதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. ஏதேனும் தேவைப்பட்டால் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.