#BBREAKING : நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க தடையில்லை..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், கட்டடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்? என நீதிபதிகள் கேள்வி
நாடாளுமன்ற புதிய கட்டிடம் வரும் 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறக்க உள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க வேண்டும் என்று ஜெய் சுகேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் தாக்கல். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பி.எஸ்.நரசிம்ஹா இந்த வலக்கை விசாரித்தனர். நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், கட்டடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். உத்தரவின்படி நாடாளுமன்ற புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறப்பதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.