பாஜக நிர்வாகி – அரசு மருத்துவர் ஹிஜாப் விவகாரம்.! மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்.!

Thirupoondi Hijab issue

ஹிஜாப் அணிந்த அரசு மருத்துவரை வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நேர பணியில் இஸ்லாமிய பெண் மருத்துவர் பணியாற்றி வந்துள்ளார் . அப்போது ஒரு முதியவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார் . அவருக்கான ஆரம்ப சிகிச்சையை அளித்து, மேற்படி சிகிச்சைக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர் கூறியுள்ளார்.

அப்போது உடன் வந்திருந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர். இஸ்லாமிய மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பணி நேரத்தில் ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கிறீர்கள்.? மருத்துவர் உடை அணியவில்லையா.? உங்கள் தலைமை மருத்துவர் எங்கே என பல்வேறு கேள்விகள் கேட்டு பெண் மருத்துவரின் அனுமதி இன்றி விடியோவும் எடுத்துள்ளார்.

இதனை கண்ட மருத்துவரும் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து, பெண் மருத்துவரின் அனுமதியின்றி அவரை வீடியோ எடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஷ் ராமை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தினர் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள கண்டனத்தில், மருத்துவரின் அனுமதி இன்றி அந்த நபர் வீடியோ எடுத்துள்ளார் .இதுபோன்ற செயல் சமூக விரோத செயல். மத வெறி செயல். அந்த நபர் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும். முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்த மாதிரியான சமூக விரோத செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என மருத்துவர் சங்கம் வலியுறுத்திஉள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்