செங்கோல் விவகாரத்தில் பாரம்பரியம், கலாச்சாரத்தை காங்கிரஸ் வெறுப்பது ஏன்… அமித்ஷா கேள்வி.!

Amit shah Jairam Sengol

காங்கிரஸ் கட்சி இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஏன் இவ்வளவு வெறுக்கிறது என அமித்ஷா கேள்வி.

வரும் மே 28 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட இருக்கிறது, இதில் தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம்பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த செங்கோல் குறித்து தற்போது காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டரில், காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெறுக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டிலிருந்து புனித சைவ மடத்தால் பண்டித நேருவுக்கு ஒரு புனிதமான செங்கோல் வழங்கப்பட்டது, ஆனால் அது வெறும் கைத்தடியாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

amitsha tweet
amitsha tweet [Image- Twitter/@Amitshah]

தற்போது காங்கிரஸ் மற்றொரு வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளது, திருவாவடுதுறை ஆதீனம், ஒரு புனித சைவ மடம், இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக்கூறியது. ஆனால் காங்கிரஸ் தற்போது ஆதீனத்தின் வரலாற்றை போலி என்கிறது. முதலில் காங்கிரஸ் அவர்களின் நடத்தையை சிந்தஹிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், சுதந்திரம் அடைந்த சமயத்தில் ஆகஸ்ட் 1947 இல் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் விவகாரத்தில், மவுண்ட்பேட்டன், ராஜாஜி & நேரு ஆகியோர் இந்த செங்கோலை பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்றியதற்கான அடையாளமாக விவரித்ததற்கு எந்தவித ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இவை அனைத்தும் தற்போது தமிழகத்தில் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமித்ஷா, காங்கிரஸ்-இன் செயலுக்கு கடுமையாக சாடியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்