பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது! – அமைச்சர் பொன்முடி விளக்கம்

minister ponmudi

எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம் என அமைச்சர் பேட்டி.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கலைஞர் ஆட்சியில் அறிவியல் பட்டப்படிப்புகள் தமிழில் கற்பிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியை புகுத்தியது கலைஞர் தான். அண்ணா ஆட்சி காலத்தில் சமூகவியல் பட்டப்படிப்பு பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டது. மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு கல்லூரிகளில், தமிழ் மொழியில் உள்ள மெக்கானிக்கல் மற்றும் சிவில் இளங்கலை பொறியியல் படிப்புகளை தற்காலிகமாக மூட அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது. இதன்பின்னர் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்பட்ட மெக்கானிக்கல் மற்றும் சிவில் இளங்கலை பொறியியல் பாடப் பிரிவுகளை மூட வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்