‘நத்திங் போன் 2’ எப்போது அறிமுகம் தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
‘நத்திங் போன் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய் கூறியுள்ளார்.
நவீன தொழில்நுட்ப காலத்தில் ஸ்மார்ட்போன், கணினிகள் போன்ற பல சாதனங்களின் பரிணாம் என்பது அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டு மக்களிடையே தங்களது தயாரிப்புகளை கொண்டுபோய் சேர்ப்பதற்கு பல புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான நத்திங் டெக்னாலஜி அதன் ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. நிறுவனத்தின் நத்திங் போன் 1 (Nothing Phone 1) அறிமுகமானது பயனர்களிடையே அதிக பரபரப்பைக் கண்டாலும், கேமராவின் தரம் போன்ற வழக்கமான சிக்கல்களை சந்தித்தது.
அதனை பூர்த்தி செய்யும் விதமாக நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதை அந்த நிறுவனம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வரும் ஜூலை மாதத்தில் உலக அளவில் அறிமுகப்படுத்தபடும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் அறிவித்துள்ளார்.
தற்பொழுது, வரவிருக்கும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பு அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல்கள்களை காணலாம்.
- நத்திங் போன் 1-ல் உள்ள அம்சங்கள் போலவே நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலவற்றை தவிர,
- நத்திங் போன் 1-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4,500mAh பேட்டரியை விட, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
- நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வடிவமைப்பை இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை, எனவே இது முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கலாம்.
- இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) என்ற உயர்தர சிப் பயன்படுத்துவதால், நத்திங் போன் 2 போனின் விலை, முதல் போனை விட அதிகமாக இருக்கும்.
- இந்தியாவில் நத்திங் போன் 1-ன் ஆரம்ப விலை ரூ.32,999 என அறிவிக்கப்பட்டது. நத்திங் போன் 2- விலை ரூ.40,000-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும் OnePlus ஸ்மார்ட்போனில் அதே Snapdragon 8+ Gen 1 SoC உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.