அவசர சட்ட விவகாரம்: இன்று ராகுல் காந்தியை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.!
ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கிய விவகாரத்தில், மத்திய அரசின் இந்த அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே, முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் வங்காளத் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அவர்களை தொடர்ந்து, நேற்று சரத் பவாரை சந்தித்து அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை உறுதியளித்தார்.
இந்த சந்திப்புகளுக்கு பிறகு நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து, “மத்திய அரசின் அவசரச் சட்டத்தை ராஜ்யசபாவில் தோற்கடிக்க முடியும். இது அரசியல் அல்ல, நாட்டின் விஷயம் என்று கூறினார்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்த அவசரச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு கோரி ஆம் ஆத்மி கட்சி ஒவ்வொரு தரப்பினரையும் அணுகி வருவதாக டெல்லி முதல்வர் கூறினார்.