பாகிஸ்தானில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் ஆலையில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நுழைந்து தாக்கியதில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் பலியானார்கள். இதையடுத்து ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் பாகிஸ்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆலையில் 50 பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.