பஞ்சாப் நேஷனல் வங்கியில் 240 காலிப்பணிகள்..! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) காலியாக உள்ள அதிகாரி (Officer) மற்றும் மேலாளர் (Manager) பதவிகளை நிரப்ப ஆள்சேர்ப்புக்கான PNB Recruitment 2023 அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் :
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரி பணிப்பிரிவில் கடன் (Credit – 200), தொழில் (Industry – 8), சிவில் இன்ஜினியர் (Civil Engineer – 5), மின் பொறியாளர் (Electrical Engineer – 4), கட்டிடக் கலைஞர் (Architect – 1), பொருளாதாரம் (Economics – 6), மற்றும் மேலாளர் பணிப்பிரிவில் பொருளாதாரம் (Economics – 4), தரவு விஞ்ஞானி (Data Scientist – 3), சீனியர் தரவு விஞ்ஞானி (Senior Data Scientist – 2), சைபர் பாதுகாப்பு (Cyber security – 4), மூத்த சைபர் பாதுகாப்பு (Senior Cyber security – 3) என மொத்தம் 240 பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர் வயது :
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரி மற்றும் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவரின் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயது உடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு PNB Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி :
விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்/கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து பி.ஏ (BA) முதல் சிஏ/சிஎம்ஏ/சிஎஃப்ஏ (CA/CMA/CFA) வரையிலான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் செயலில் இருக்கும் தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் ஆன்லைன் தேர்வு அல்லது நேர்காணல் போன்றவற்றிற்கான அழைப்புக் கடிதங்கள் வங்கியால் அனுப்பப்படலாம்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய “புதிய பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, தோன்றும் திரையில் அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவும்.
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை கவனமாக நிரப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், வங்கிக்கு சேவை செய்வதற்காந உத்தரவாதத்துடன் ஒரு இழப்பீட்டுப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக்கட்டணம் :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூபிடி, பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.59ம், பொது/ஓபிசி பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.1,180ம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
பஞ்சாப் நேஷனல் வங்கி பணியில் சேர ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பங்களை மே 24ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
தேர்வு முறை :
ஒவ்வொரு பதவிக்கு பெறப்படும் விண்ணப்பங்களின் தகுதியைப் பொருத்து ஆன்லைன் எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்காணல் அல்லது நேரடியாக நடைபெறும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் பணியாளர் தேர்வு செய்யப்படுவார்.
சம்பள விவரம் :
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.36000 முதல் ரூ.78230 வரை சம்பளம் வழங்கப்படும் என்று PNB Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.