ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை – அமுல் நிறுவனம்

amul

ஆவின் நிறுவனத்துடன் நாங்கள்  போட்டியிடவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம். 

தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமுல் நிறுவனம், ஆவின் நிறுவனத்துடன் நாங்கள்  போட்டியிடவில்லை. தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் நபர்கள் அமுல் நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக வெளியான தகவல் பொய்யானது. கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கு தான் நாங்களும் கொள்முதல் செய்கிறோம்.

ஆவின் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என்று பேச்சு நடக்கவில்லை. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் என்றால் ஆவினிடமிருந்து என்ஓசி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன அவர் தெரிவித்துளளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்