புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வானதி சீனிவாசன் ட்வீட்..!
புதிய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்கப்போகும் தமிழ்நாட்டின் செங்கோலை வைக்க முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என வானதி ட்வீட்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதுடன், இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் செங்கோல் இடப்பெறுவது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன் அவர்கள், சைவ மதத்தை சார்ந்த செங்கோல் வைக்கப்படவில்லை திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்புகள் உள்ளது இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிகழ்ந்த ஆட்சி பரிமாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம். இது தமிழகத்திற்கு கௌரவமான விஷயம். இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வானதி சீனிவாசன் அவர்கள் தனது தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்கப்போகும் தமிழ்நாட்டின் செங்கோலை வைக்க முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
It was a momentous day as ‘SENGOL’ stepped onto the hall of the #parliament. My heartfelt gratitude to the one and only, #PrimeMinister Narendra Modi, who shows immense respect and honor wherever he gets the opportunity to.
Among the politicians who trumpet the majesty of Tamil… pic.twitter.com/jn3jbPzzeH— Vanathi Srinivasan (@VanathiBJP) May 25, 2023