Breaking News: 87,357 கோடி ரூபாய் இழப்பு..! நட்டத்தில் ஓடும் பொதுத்துறை வங்கிகள்.! வாடிக்கையாளர்கள் அச்சம்..!
இந்தியாவில் மொத்தம் 21 பொதுத்துறை வங்கிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2017 – 18 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள மொத்த பொதுத்துறை வங்கிகளில் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் முதன்மை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடிக்கு அளிக்கப்பட்ட 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் ரூ.12,282.82 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஐ.டி.பி.ஐ வங்கியும் ரூ.88,237.93 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இரண்டாம் இடம் வகிக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் இந்த ஆண்டு லாபம் ஏதுமின்றி சுமார் ரூ.6,547.45 கோடி ரூபாய் இழப்பு அடைந்துள்ளது.
மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் இழப்பு ஏற்பட்ட வங்கிகள் பட்டியலில் இருந்து விலகி, இந்தியன் வங்கியும், விஜயா வங்கியுமே கணிசமான லாபம் ஈட்டியுள்ளன. 2017-18 நிதியாண்டில் இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல் விஜயா வங்கியும் ரூ.727.02 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்தன. இந்நிலையில், ஒரே ஆண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன.