பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற திறப்பு விழா நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக் கூடாது என நிர்மலா சீதாராமன் பேட்டி.
சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக் கூடாது. மக்களுக்காகவாவது இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.
குடியரசுத் தலைவரை மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். முன்பு குடியரசுத் தலைவர் விமர்சித்தவர்கள் தான் தற்போது அவரைக் கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.
சதீஷ்கர் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை திறப்பின் போது ஆளுநர்களை ஏன் அழைக்கவில்லை? அங்கு சட்டப்பேரவையை திறந்து வைத்த சோனியா காந்தி ஆளுநரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது குறித்து பேசிய அவர், சைவ மதத்தை சார்ந்த செங்கல் வைக்கப்படவில்லை திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்புகள் உள்ளது இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிகழ்ந்த ஆட்சி பரிமாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம். இது தமிழகத்திற்கு கௌரவமான விஷயம். இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை.
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகில் செங்கோல் நிறுவப்பட உள்ளது. எந்தவித மத அடையாளமும் இல்லாமல் மரபு ரீதியாக செங்கோல் வைக்கப்படுகிறது. ஒருதலை பட்சமாக இல்லாமல் அனைவருக்கும் செங்கோல் உறுதுணையாக இருக்கும். தருமபுர, திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டிய தொழிலாளர்களும் மரியாதை செய்யப்பட உள்ளனர். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. செங்கோலை வடிவமைத்த உம்முடி சகோதரர்களை பிரதமர் மோடி கௌரவிக்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.