கால்சியம் சத்தை தளர செய்யும் சோடா!!
வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே அனைவரும் அருந்துவது சோடா.ஆனால் அவ்வாறு குடிப்பது உடலுக்கு நன்மை கிடைக்குமா இல்லை தீங்கு விளைவிக்குமா என்பதை கிழே காண்போம்.
அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னி சேதமடையுமாம். அது டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
சோடா இருக்கும் பாட்டில் மற்றும் கேன்களில் எண்டோக்ரைன் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புண்டு.
சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவை குடல், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கிவிடும். இவற்றில் உள்ள போஸ்பொரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை தளர செய்திடும்.
எனவே ஒவ்வொருவரும் சோடா குடிக்காமல் இருப்பது உடலுக்கு மிகவும் சிறந்தது.