அடுத்தடுத்த அரசியல் சந்திப்புகள்.. இன்று சரத் பவாரை சந்திக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்.!

Arvind Kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்திக்க உள்ளார். 

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மும்பை வந்தனர். ஏற்கனவே நேற்று சிவசேனா கட்சியின் (ஒரு பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரேவை புதன்கிழமை இரு முதல்வர்களும் சந்தித்தனர்.

உத்தவ் தாக்கரேவை சந்தித்த பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால், மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறினார். மேலும், சிபிஐ மற்றும் அமலாக்க அமைப்புகளைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த சந்திப்பு குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘ ஜனநாயகத்திற்கு எதிரானவர்களைத் தோற்கடிக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இந்த முறை இந்த கூட்டணியை தவறவிட்டால், நாட்டில் ஜனநாயகம் என்பது இருக்காது. நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து, தான் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை சந்திக்க உள்ளார். ஏற்கனவே, கடந்த  செவ்வாயன்று, கெஜ்ரிவால் மற்றும் பக்வந்த் மான் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்