அரசு விழாவில் எதிர்க்கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.! பிரதமர் மோடி கருத்து.!
ஆஸ்திரேலிய அரசு விழாவில் அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று நாடு திரும்பினார். இந்த பயணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா சிட்னியில் நடந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் மட்டும் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
அந்நாட்டு பிரதமருடன், முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் உடன் கலந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் மேலும், இந்த நிகழ்வானது ஜனநாயகத்தின் பலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்து, நாட்டில் உள்ள 19 எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனை மறைமுகமாக குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி இந்த கருத்தை முன்வைத்துள்ளார் என கூறப்படுகிறது.