Today’s Live: புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விவகாரம்..! உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்..!

LIVE NEWS

பொதுநல மனு தாக்கல்:

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

25.05.2023 12:30 PM

முதல்வர் கடிதம்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, ஆவின் நலனுக்கு கேடு விளைவிப்பதுடன், கூட்டுறவு சங்கங்களுக்கு இடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும். தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கொட்டகைப் பகுதியில் இருந்து பால் கொள்முதலை உடனடியாக நிறுத்த அமுல் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

25.05.2023 12:10 PM

அண்ணா பல்கலைக்கழகம்:

அண்ணா பல்கலைக்கழகம் 2023-2024 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

25.05.2023 11:50 PM

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:

டேராடூனில் இருந்து டெல்லிக்கு உத்தரகாண்ட் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் மக்களின் பயண நேரத்தை குறைக்கும்,” என்று டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கொடியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

25.05.2023 11:30 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி:

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன், நெஞ்சம் நெகிழ்ந்தேன், தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு அவர்களிடம் உரையாற்றினேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப் பதிந்தேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

25.05.2023 8:00 AM

மாணவியின் முகத்தில் கேக் தடவிய 4 பேர் கைது:

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அவ்வழியாக நடந்து சென்ற 10ம் வகுப்பு மாணவியின் கன்னத்தில் கேக் தடவிய 4 பேர் கைது. அவர்கள் மெது பெண்கள் வன்கொடுமை தடுப்பு, மானபங்க முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

25.05.2023 7:00 AM

தமிழ் நமது மொழி:

தமிழ், உலகின் மிகவும் பழமையான மொழி; அது நமது மொழி, ஒவ்வொரு இந்திய குடிமகனின் மொழியாகும் என்று 3 நாள் வெளிநாட்டு பயணமாக சென்ற பிரதமர் மோடி இதனை சிட்னியில் பேசியுள்ளார்.

25.05.2023 6:00 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army