பிரதமரின் ஆஸ்திரேலிய வருகை… மூவர்ண விளக்குகளை ஒளிரவிட்ட சிட்னி.!
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சிட்னியில் தேசியக்கொடி நிற விளக்குகள் ஒளிரப்பட்டு சிறப்பு வரவேற்பு.
ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக சென்றார். ஜி-7 உச்சிமாநாட்டை ஜப்பானில் முடித்துக்கொண்டு, பப்புவா நியூ கினியாவில் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு மாநாடுகளிலும் கலந்து கொண்டார். இதனையடுத்து ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி.
மேலும் நேற்று ஆஸ்திரேலியாவின் கலாச்சார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார். தொடர்ந்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளை காண ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக சிட்னியில் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இருவரும் சிட்னியின் துறைமுகம் மற்றும் ஒபேரா ஹவுஸ்-க்கு சென்றனர். சிட்னியின் துறைமுகத்தில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சிட்னியின் துறைமுகம் மற்றும் ஒபேரா ஹவுஸ் இந்தியாவின் மூவர்ணக்கொடியின் நிறங்களில் விளக்குகளை ஒளிரவிட்டு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
#WATCH | Prime Minister Narendra Modi and Australian Prime Minister Anthony Albanese visit the Sydney Harbour and Opera House, in Australia. pic.twitter.com/tgToEmv2gf
— ANI (@ANI) May 24, 2023