ஓடியது நிபா வைரஸ்.! மூடப்பட்டிருந்த பள்ளிகள் 12-ம் தேதி திறப்பு! அரசு உத்தரவு..!
கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை, நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பதை 12-ம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், வரும் 12-ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின்னர் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிபா காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் வரும் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
நோய் அறிகுறிகளுடன் இருந்த 371 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நிபா பாதிப்பு இல்லை சோதனையின் முடிவில் தெரிவந்துள்ளது. இதே போன்ற முடிவுகளையே, நோய் அறிகுறிகளுடன் மீதம் உள்ள நபர்களிடம் இருந்தும் நாங்கள் எதிர்பார்கின்றோம்.
நிபா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது. மேலும், நோய் பாதிப்பினால் மாநிலத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.