பசுமையை நோக்கி ஐபிஎல்…இனிமேல் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள்..!!

கோடை காலம் தொடங்கிவிட்ட காரணத்தால் புவி வெப்பமயமாதல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் -2023க்கான தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், 2023 ஆம் ஆண்டு  ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளின் போது இதில் விளையாடும் அணிகளில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்களை நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்த முயற்சி பூமியை பசுமையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கிரகமாக மாற்ற உதவும். அந்த வகையில், நேற்று செவ்வாய்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான குவாலிபையர் 1-ல் இருந்து இந்த மரங்களை நடுவது தொடங்கப்பட்டது.

நேற்று சென்னை மற்றும்  குஜராத் அணிகள்  மோதிய போட்டியில் மொத்தம் 84 டாட் பால்கள் போடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு அணிகளுக்கும் மொத்தமாக 42,000 மரக்கன்றுகளைப் பெற்றது. இதனை நடவும் செய்து வருகின்றார்கள்.