கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சேவை தொடக்கம்!
ரூ.8.2 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளூர் என்ற பெயரில் 2 நவீன சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரியில் இருந்து வட்டுக்கோட்டை வரையிலான 6 கடல் மைல் தொலைவுக்கு நவீன சொகுசு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. நவீன சொகுசு படகு சேவையை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மனோ தங்கராஜன் தொடங்கி வைத்தனர். ரூ.8.2 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளூர் என்ற பெயரில் 2 நவீன சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை ஒன்றரை மணி நேரம் கடலில் சுற்றுலா சென்று வருவதற்கு பயன்படுத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. இந்த நிலையில், குமரியில் இந்த சொகுசு படகு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, கன்னியாகுமரி படகு தளத்தில் இருந்து வட்டக்கோட்டை வரை சொகுசு படகுகளில் சுற்றுலா பயணிகள் கடல் பயணம் சென்று வருவதற்கான திட்டம் இன்று அமலானது. மேலும், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியையும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோ தங்கராஜன் இன்று தொடங்கி வைத்தனர்.