சோகம்….லாரி டயர் வெடித்து 2 பேர் பரிதாபமாக பலி.!
ஹரியானாவில் இருந்து மும்பை சென்றுகொண்டிருந்த லாரியின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் லாரியில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்ராஹிம் பாஸ் கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி டயர் வெடித்ததில் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 5 மாடுகளும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நசீர் (27), இம்ரான் (32) என அடையாளம் காணப்பட்ட இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அங்கு நவ்லியில் வசிக்கும் நசீர் மற்றும் இம்ரான் ஆகியோர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்னர். மேலும், காயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.