தன்னுடன் பயணித்த பைக்கருக்கு நம்ப முடியாத பரிசை அளித்த நடிகர் அஜித்.!
நடிகர் அஜித்குமார் ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் சார்பில் அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
புதியதாக மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ள அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வருகிறார்கள். மேலும் நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
தற்போது, அஜித்தின் சுற்றுப்பயண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது, அஜித் தனது சக-ரைடர் சுகத் சத்பதிக்கு BMW F 850 GS பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். சுகத் சத்பதி தனது டியூக் 390 இல் வெவ்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில், அஜித் பரிசளித்த புதிய சூப்பர் பைக்கின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்தார். அவர் ஒருமுறை அவருக்காக வடகிழக்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்ததாகவும், சமீபத்திய நேபாளம்-பூடான் பயணத்தில் நடிகருடன் பயணம் செய்ததாகவும் பெருமிதம் கொண்டுள்ளார்.
View this post on Instagram