போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானம்..! சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்..!

Pakistani drone

பஞ்சாப் எல்லையில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியுள்ளது.

பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லையில் போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிலிருந்து போதைப்பொருள் அடங்கிய 2 பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமிர்தசரஸின் பிஎஸ்எஃப் கமாண்டன்ட் அஜய் குமார் மிஸ்ரா கூறுகையில், பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியது. அதில் ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 2 பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன, விழிப்புடன் இருந்த பிஎஸ்எஃப் வீரர்களால் பாகிஸ்தானின் மற்றொரு முயற்சி முறியடிக்கப்பட்டது என்று கூறினார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தானோ கலான் கிராமத்தில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றொரு ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த எடை தோராயமாக 3.3 கிலோ என்றும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்