புத்தக பையில் துப்பாக்கி.. வெடிமருந்துகள்..! 15 வயது பள்ளி மாணவர் மீது வழக்குப்பதிவு.!
அமெரிக்காவில் பள்ளி மாணவன் தனது புத்தக பையில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கொண்டுவந்துள்ளான்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சரம் என்பது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் அண்மையில் பள்ளி வளாகத்தில் மாணவரிடம் துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின், ஃபீனிக்ஸ் நகரில் உள்ள போஸ்ட்ரோம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர், தான் படிக்கும் பள்ளிகு வழக்கம் போல வந்துள்ளான். அப்போது அவனது புத்தக பையின் மீது சந்தேகம் வரவே புத்தக பையை சோதனையிட்டு உள்ளனர்.
அந்த புத்தக பையில் AR-15 ரக தானியங்கி துப்பாக்கியும், மதிய உணவு பையில் சில வெடிமருந்துகளும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பள்ளி மாணவன் மீது 2 பிரிவுகளின் மீது குற்றம் சுமத்தி, வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.