நடிகர் சரத்பாபு மறைவு: எஜமானின் 5 மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்…

sarath babu

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு, நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71, அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Sarath Babu
Sarath Babu [Image source : file image ]

தெலுங்கு திரையுலகில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சரத்பாபு, 1978 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘நிழல் நிஜமாகிறது’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

RIP Sarath Babu
RIP Sarath Babu [Image source : file image ]

சரத்பாபு கடந்த 40 வருடங்களாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக, சூப்பர் ஸ்டாருடன் நடித்த திரைப்படங்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சரத்பாபு நடித்த ஐந்து மறக்கமுடியாத பாத்திரங்களை இங்கே பார்க்கலாம்.

Mullum Malarum
Mullum Malarum [Imagesource : YouTube]

முள்ளும் மலரும்:

இயக்குனர் மகேந்திரன் இயக்கிய, ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் 1978-ல் வெளியானது. ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தில் சரத் பாபு துணை வேடத்தில் நடித்திருந்தார். சரத்பாபு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு ஈர்க்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்றே சொல்லலாம். இருவரும் எதிரெதிர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் ஜினிகாந்துடன் புதிய நட்புறவு வளர்ந்தது.

Annamalai
Annamalai [Imagesource : YouTube]

அண்ணாமலை:

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான “அண்ணாமலை” படத்தில் ரஜினியின் நண்பராக சரத்பாபு நடித்திருந்தார். இந்த திரைப்படம் இருவருக்குமே தரமான படமாக அமைந்தது. படத்தின் கதைபடி, ஒரு காரணத்தால் எதிரெதிராக மாறும் இரண்டு நண்பர்களைப் பற்றியது.

அந்த வகையில், படத்தில் சரத்பாபு மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நண்பர்களாக அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்பாகத் நடித்திருப்பர். ‘அண்ணாமலை’ படத்தில் வரும் சரத் பாபுவின் புகைப்படங்களின் மீம்ஸ்கள் அடிக்கடி இணையத்தளத்தில்  வலம்வருவது வழக்கம். ஏனெனில் இப்படத்தின் சில காட்சிகள் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளன.

Muthu
Muthu [Imagesource : YouTube]

முத்து:

முத்து படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிக்கும் இந்த படத்தின் மூலம் சரத்பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சரத்பாபுவுக்கு முத்து படத்தின் திரை நேரமும் பெரியதாக அமைந்தது. அதன்படி, அவரது எஜமான் கதாபாத்திரத்தில் மீண்டும் ரசிகர்களைக் கவரும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.  மேலும், இது சரத்பாபு மற்றும் ரஜினிகாந்தின் நட்பு பெரிதும் வளர்ந்தது.

Sarath Babu
Sarath Babu [Imagesource : YouTube]

அருள்:

சரத் பாபு சிறிய வேடங்களில் நடிக்க விரும்பியதன் மூலம், சியான் விக்ரம் நடித்த ‘அருள்’ படத்தில் மருத்துவராக நடித்தார். ஆனால் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் முக்கியதுவமாக அமைந்தது. ஏனெனில் அவரது காட்சி படத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் அமைத்தது. இந்நிலையில், விக்ரமுடன் சரத்பாபு திரை பகிர்வது ரசிகர்களுக்கு ஒரு சிறப்புப் படமாக மாறியது.

Sarathbabu
Sarathbabu Image source : file image ]

புதிய கீதை:

புதிய கீதை படத்தில் தளபதி விஜய்யுடன் திரை இடத்தைப் பகிர்ந்துகொண்ட நடிகர் சரத்பாபு படத்தில் ஜோதிடராக நடித்தார். சரத்பாபுவின் கதாபாத்திரம் படத்தை சஸ்பென்ஸுடன் கொண்டு சென்றது. மேலும், விஜய்யின் படத்தில் மூத்த நடிகரின் கதாபாத்திரம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. கேபி ஜெகன் இயக்கிய ‘புதிய கீதை’ படத்தில் கலாபவன் மணி, கருணாஸ், கலைராணி, சஞ்சீவ், இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest