ஆண்கள் ஈட்டி எறிதலில் முதல் முறையாக முதலிடம்… உலக சாதனை படைத்த நீரஜ் சோப்ரா.!

Neeraj chopra Worldno1

ஆண்கள் ஈட்டி எறிதலில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்து நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஆண்கள் ஈட்டி எறிதலில் (ஜாவ்லின் த்ரோ) உலக அளவில் முதன்முறையாக முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது அவரது ஈட்டி எறிதலில் முக்கிய மைல்கல் சாதனையாகும். நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை விட 22 புள்ளிகள் முன்னேறி முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்திய விளையாட்டு ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட்டில் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்திலிருந்தார், அதன்பிறகு மே 5 அன்று நீரஜ் தோஹா டயமண்ட் லீக்கில் 88.67 மீ எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.<

/p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்