சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று 4 பேர் பதவியேற்பு!

madras high court

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

கடந்த மார்ச் மாதம், கொலிஜியம் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. இதனை மத்திய சட்ட அமைச்சகம் கொலிஜியம் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்