2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற பான் அவசியம்.? ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்.!

50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற பான் கார்டு அவசியம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30க்கு பிறகு பொதுமக்கள் புழக்கத்திற்கு பயன்படாது எனவும், அதற்குள் வங்கிகளில் அதனை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆவணங்கள் இன்றி 20 ஆயிரம் ரூபாய் வரையில் 10*2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். அடுத்ததாக, 50 ஆயிரம் ரூபாய் வரையில் பெயர் , முகவரி, தொலைபேசி எண் (அந்தந்த வங்கிகளின் விதிகளின்படி) கொடுத்து மாற்றி கொள்ளலாம்.

50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு பான் எண் கட்டாயம் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.